திராவிட மாடல் அரசு என்றாலே எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் அர்த்தம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
The Dravidian model government means everything for everyone Deputy Chief Minister Udhayanidhi Stalin
கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய உள்ள புதிய ஹாக்கி மைதான கட்டுமானப் பணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இங்கு டர்ப் தளம், மின் கோபுர விளக்குகள், கழிவறை, பார்வையாளர் அரங்கம் உள்ளிட்டவை மைதானத்தில் அமையவுள்ளன.
இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- பட்டா என்பது வெறும் ஆவணம் கிடையாது. உங்கள் இடத்தின் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய சட்டப்பூர்வ உரிமையாகும். உங்களுடைய உரிமையை நம்முடைய திராவிட மாடல் அரசு இன்று நிலை நாட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கு என்று நிறைய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் அங்கு மேலும் பேசுகையில்; கடந்த வாரம் கூட இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் அறிவிக்காத, உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்வதற்கான சட்டமசோதாவை, சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் 15,000 மாற்றுத்திறனாளிகள் பயனடையவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திராவிட மாடல் அரசு என்றாலே எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் அர்த்தம் என்று குறிப்பிட்ட அவர், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் தேவை அறிந்து செயல்படுவதுதான் திராவிட மாடல் அரசு என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மகளிர் உரிமைத்தொகையை கடன் தொகையாக பார்க்காமல், நம்பிக்கை தொகையாக பார்க்கிறோம். இந்த அரசு என்றைக்கும் மக்களுக்கு பக்கபலமாக இருக்கும் என்றும், நீங்களும் இந்த அரசுக்கு பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
The Dravidian model government means everything for everyone Deputy Chief Minister Udhayanidhi Stalin