'அண்ணா திமுக கட்சி என்பது இப்பொழுது இல்லை; பாரதிய ஜனதாவின் அடிமை அதிமுக'; ஒரத்தநாடு திமுக வேட்பாளர் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 06 நாட்கள் மாத்திரமே உள்ளது. தேர்தலை முன்னிட்டு, அணைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர். வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த தேர்தலில் நான்கு கட்ட போட்டியை பற்றியும் ஒரத்தநாட்டில் திமுகவின் வெற்றி நிலை எப்படியுள்ளது என்பது குறித்து வைத்திலிங்கத்திடம் செய்தியாளர் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளதாகவும், இந்த ஐந்து வருடகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்த சாதனைகளை மகளிர், மாணவ மாணவிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பலதரப்பட்ட மக்களும் வரவேற்கிறார்கள் போற்றுகிறர்கள் அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.

அத்துடன், அண்ணாதிமுக கட்சி என்பது இப்பொழுது இல்லை எனவும் அது எடப்பாடி அண்ணாதிமுகவாக மாறியது என விமர்சித்துள்ளார். மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக என்ற கட்சியை இல்லாமல் போய்விட்டதாகவும், இப்போது இருப்பது பாரதிய ஜனதாவின் அடிமை அதிமுக என்று கூறியுள்ளார்.

ஒரத்தநாடு பகுதில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வைத்திலிங்கம், திமுக அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் எடுத்து கூறி வாக்கு சேகரித்து வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The DMK candidate for Orathanadu criticized that the AIADMK party no longer exists


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->