இதனால்தான் 41உயிர் போச்சு! பெரம்பலூரில் அலர்ட் செய்தீங்களே.. கரூரில் மட்டும் ஏன் எங்களை தடுக்கவில்லை? முதல்வர் விஜய் கேள்வி! - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக இருப்பதாக போலீஸார் எச்சரித்ததால் மனவேதனையுடன் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு திரும்பிச் சென்றோம். அதேபோல் கரூரிலும் கூட்டம் அதிகமாக இருப்பதாக போலீஸார் எங்களை முன்கூட்டியே எச்சரித்திருந்தால் இத்தனை உயிர்களை இழந்திருக்க மாட்டோமே என தமிழக முதலமைச்சர் விஜய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக கரூருக்கு சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு உருக்கமாக பேசினார்.

அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய விஜய், பெரம்பலூரில் நடந்த சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.

பெரம்பலூரில் எங்களது நிகழ்ச்சிக்காக மக்கள் அதிகளவில் திரண்டிருந்தபோது, கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதாக போலீஸார் எங்களிடம் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். அதனை ஏற்றுக்கொண்டு, மக்களை பார்க்க முடியாத மனவலியுடன் நாங்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றோம்.

பெரம்பலூரில் எங்களை முன்கூட்டியே எச்சரித்ததைப்போல கரூரிலும் போலீஸார் எச்சரித்திருக்கலாமே? கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது, பாதுகாப்பான சூழல் இல்லை, நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்களும் அங்கு சென்றிருக்க மாட்டோமே?

அப்படி முன்கூட்டியே எங்களை அலர்ட் செய்திருந்தால் இன்று இத்தனை உயிர்களை நாம் இழந்திருக்க மாட்டோமே என விஜய் வேதனையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதா என்றும் விஜய் கேள்வி எழுப்பினார்.

அத்தனை ஆயிரம் மக்கள் ஒரே இடத்தில் கூடினார்கள். அந்த கூட்டத்தின் அளவுக்கு ஏற்ப அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்களா? மக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா? கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என விஜய் தெரிவித்தார்.

பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக இருப்பதை முன்கூட்டியே கண்டறிந்து தங்களை எச்சரித்த போலீஸார், கரூரில் மட்டும் ஏன் அதுபோன்ற எச்சரிக்கையை வழங்கவில்லை என்ற விஜய்யின் கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போலீஸ் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் எழுப்பியுள்ள கேள்விகள் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

That is why 41 lives were lost You issued alerts in Perambalur why didnot you stop us in Karur Chief Minister Vijay question


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->