super! என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கு நன்றி...!!!- வைகோ பெருமிதம்
Thank you kalaingar who sent me Rajya Sabha Vaiko proud
இன்றுடன் பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், அப்துல்லா,சண்முகம், ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது.

மேலும், மாநிலங்களவை உறுப்பினராகவுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை. இதன் காரணமாக இன்றுடன், 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய ''வைகோ'' ஓய்வு பெறுகிறார்.
இந்தப் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் மாநிலங்களவையில் வைகோ தனது உரையை தெரிவித்தார். அப்போது,' நாடாளுமன்றத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி' என வைகோ தெரிவித்தார். அதில் குறிப்பாக," என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கும், வார்த்தெடுத்த முரசொலி மாறனுக்கும் நன்றி" என்று வைகோ தெரிவித்தார்.
English Summary
Thank you kalaingar who sent me Rajya Sabha Vaiko proud