டெல்லியில் ‘தளபதி’யின் அதிரடி என்ட்ரி...! - மே 22-ல் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய்...!
Thalapathy makes dramatic entry Delhi Chief Minister Vijay meet Prime Minister Modi person May 22nd
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று மாநில அரசியலில் சக்திவாய்ந்த கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு வழங்கின.

இதன் மூலம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்தது.இதனைத் தொடர்ந்து, கடந்த 10-ந்தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.
அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்தது.இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் வரும் 22-ந்தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அப்போது அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். தற்போது பிரதமர் மோடி அரசு முறை வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால், அவர் 22-ந்தேதி நாடு திரும்பியவுடன் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது தமிழக வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மாநில நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து விஜய் விரிவாக எடுத்துரைக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.மேலும், பிரதமர் மோடியை தொடர்ந்து காங்கிரஸ் தலைமைக்கும் விஜய் முக்கியத்துவம் அளிக்கிறார்.
டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் சந்தித்து அரசியல் மற்றும் நிர்வாகம் தொடர்பான கருத்துகளை பகிர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடியை விஜய் முதன்முறையாக சந்திக்க உள்ள இந்த நிகழ்வு, தேசிய அரசியல் அரங்கில் புதிய அரசியல் சமன்பாடுகளுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thalapathy makes dramatic entry Delhi Chief Minister Vijay meet Prime Minister Modi person May 22nd