திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பட்டியலில் இருந்த கட்சி., பாஜகவின் வேட்பாளருக்கு ஆதரவு.!
Telugu Desam Party supports Draupadi Murmu
குடியரசுத் தலைவா் தோ்தல் வருகின்ற 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி சாா்பில், திரௌபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனா்.
திரௌபதி முா்முவுக்கு சிரோமணி அகாலி தளம், ஒய்.எஸ்.ஆா் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளது.
இந்த வகையில் புதிதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, குடியரசுத் தலைவா் தோ்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும், மக்களவையில் மூன்று உறுப்பினர்களும் மற்றும் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் 23 உறுப்பினர்களும் உள்ளனர்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பட்டியலில் தெலுங்கு தேசம் கட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Telugu Desam Party supports Draupadi Murmu