“குடி, குடியைக் கெடுக்கும்” என்ற தமிழக அரசின் விளம்பரம் வீண்! அதிரடி தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்ற கிளை! 
                                    
                                    
                                   TASMAC TNGovt Chennai HC Divition 
 
                                 
                               
                                
                                      
                                            மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், தமிழக அரசு “குடி, குடியைக் கெடுக்கும்” என விளம்பரம் செய்வதால் எவ்வித பயனும் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
தேனி பூதிப்புரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் குமாரலிங்கம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். 
அதில், பூதிப்புரம் அருகே உள்ள ராஜபூபால சமுத்திரம் கண்மாய் அருகே அரசு மதுக்கடை அமைக்க முயற்சி செய்யப்படுவதாக கூறினார். இந்த இடத்தில் பெண்கள் பொதுக் கழிப்பிடம் உள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் உருவாகும் என்றும் தெரிவித்தார். மேலும், அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் மூடப்பட்ட 500 மதுக் கடைகளில் இதுவும் ஒன்றாகும் என குறிப்பிட்டார்.  
இதனை நேற்று விசாரணை செய்த நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் தலைமையிலான அமர்வு முன், "அந்த இடத்தில் மதுக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்பட்டதாக தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  
இதனையடுத்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், குறிப்பிட்ட அந்த இடத்தின் அருகே பெண்கள் கழிப்பறையும், பேருந்து நிலையமும் உள்ளதால் அங்கு மதுக் கடை அமைக்க அனுமதி அளிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. 
மேலும், மதுக் கடைகள் குறைப்பு குறித்து அரசு முயற்சி செய்யாமல் விழிப்புணர்வு விளம்பரம் செய்வது பயனற்றது என்று நீதிபதிகள் தமிழக அரசை கடுமையாக சாடினர்.
                                     
                                 
                   
                       English Summary
                       TASMAC TNGovt Chennai HC Divition