விடியல் ஆட்சியின் மெகா சிக்ஸர்.! மதுவிற்பனையில் சாதனை படைத்த ஸ்டாலின்.! 660 கோடி ரூபாய்.!  - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையின்போது மது விற்பனை பாதிக்கப்படாத அளவுக்கு, பல்வேறு நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டது. இன்றும் (15ஆம் தேதி) நாளையும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

தொடர்ந்து இரண்டு நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் நிலை உள்ளதால், நேற்று (14ஆம் தேதி வெள்ளிக்கிழமை) பொங்கல் தினத்தன்று கூடுதலான மது விற்பனையை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டது.

இதன்பலனாக அதிக மது விற்பனையை செய்து தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் சாதனை புரிந்துள்ளது. 

குறிப்பாக நேற்று ஒரே நாளில் 300 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

கடந்த 12-ந் தேதி 155.6 கோடி ரூபாய்க்கும், 13-ந் தேதி 203.5 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது.

மொத்தமாக கடந்த 3 நாட்களில் தமிழகம் முழுவதும் 680 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகி உள்ளது. 

இதில், 12, 13-ந் தேதிகளில் சென்னை மண்டலத்தில் 70.54 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை ஆகியுள்ளது. 

பண்டிகை காலங்களில் 250 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகும். ஆனால், இந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாக 300 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac sale report jan 14


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->