வைகுண்டரின் 189-வது பிறந்த தின வாழ்த்து - சி.பி.ஐ.எம்..! - Seithipunal
Seithipunal


அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தின வாழ்த்து செய்தி சி.பி.ஐ.எம் சார்பாக வெளியிடுட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (எம்) கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி  மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் தென்முனையில் சமூக சிந்தனையை பரப்பியதோடு, சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஒன்றுபடுத்தி அடிமைத்தனத்தை உருவாக்கிய மனுதர்மவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்து, மக்களால் அவதார புருசராக போற்றப்பட்டவர் அய்யா வைகுண்டர்.

தீண்டாமையை ஒழிக்கும் வகையில் அந்த காலத்திலேயே ‘சமபந்தி’ விருந்து நடைபெற காரணமாக இருந்தவர் அய்யா வைகுண்டர். சுயமரியாதைக்கு வித்திட்டவர், சமூகநீதியை நிலைநாட்ட பாடுபட்டவர், சுரண்டலுக்கு எதிராக போராட்டத்தை நடத்தியவர், கல்விக்கும், சிறுதொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர் அய்யா வைகுண்டர்.

சமய சீர்திருத்தவாதியாக, சமூக நெறியாளராக, பொருளாதார மேன்மைக்கு வழி சொல்லும் வித்தகராக, மக்களிடையே சமத்துவம் காண துடித்த மனிதாபிமானியாக அய்யா வைகுண்டர் ஆற்றிய பெரும் பணிகளை தமிழ்ச்சமூகம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லவும், இந்த இனிய விழா நடைபெறும் நாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu CPIM Press Release about Vaikundar Birthday Celebration 3 March 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->