தமிழக வெற்றிக் கழகம் பரிதாப நிலை… தேர்தலுக்குப் பிறகு அரசியல் களத்தில் காணாமல் போகும்...! -ராஜேந்திர பாலாஜி தாக்கு
Tamil Nadu Victory Party pitiful state disappear from political arena after elections Rajendra Balaji attacks
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது,"களத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே வலுவாக செயல்பட்டு வருகிறது; தவெக -வை யாரும் முக்கியமாக எடுத்துக்கொள்ளவில்லை.

எங்களுக்கு நேரடி அரசியல் போட்டி திராவிட முன்னேற்றக் கழகம் உடன்தான் உள்ளது. அதுவே தற்போதைய தரைநிலை உண்மை.
அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சியாக திமுக தான் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் மக்கள் ஆதரவு இல்லாத, பரிதாபகரமான கட்சியாக இருந்து, இந்தத் தேர்தலோடு அரசியல் மேடையில் இருந்து மறைந்து விடும் என்றே அவர் கடுமையாக விமர்சித்தார்.
English Summary
Tamil Nadu Victory Party pitiful state disappear from political arena after elections Rajendra Balaji attacks