சூடுபிடிக்கும் தமிழக அரசியல்! நவம்பர் 5ல் நடக்கும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை அறிவித்த விஜய்!தவெகவின் அடுத்த திட்டம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் புதிய அலையை எழுப்பிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் நவம்பர் 5ஆம் தேதி கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ள இந்தக் கூட்டம், தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல் விபத்திற்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் உட்பட கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் அமைதி காத்திருந்தனர். ஆனால், சமீபத்தில் விஜய் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்ததும், அவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கியதும், அவரது அரசியல் பயணம் மீண்டும் வேகமெடுக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

அதன் பின், தவெக தரப்பில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதனையடுத்து, கட்சியின் எதிர்கால திசை, தேர்தல் திட்டங்கள் மற்றும் முக்கிய அரசியல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க விஜய் இந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தை அழைத்துள்ளார்.

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஆழ்ந்த அமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் நம்மைத் தூறு செய்த போதிலும், அச்சமின்றி அதனை உடைத்தெறிந்து தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது,”
என குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும்,“தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக மக்கள் இருக்கையில் நம் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. கள நிலவரம் நம்மை ஊக்குவிக்கிறது. ஆகவே அடுத்த அடியை நிதானமாகவும் தீர்க்கமாகவும் எடுத்து வைக்க வேண்டும்,”
என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் விஜய் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில அரசியல் வட்டாரங்கள், இது விஜயின் நேரடி தேர்தல் களப் பாய்ச்சலுக்கான தொடக்க நிகழ்வு ஆக இருக்கலாம் என்று கூறுகின்றன.

தவெகவின் இந்த சிறப்புப் பொதுக்குழு, விஜயின் அரசியல் பாதையை தெளிவுபடுத்தும் திருப்புமுனையாக அமையும் என்று தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்கள் கவனமாகக் கண்காணித்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu politics is heating up Vijay has announced a special general body meeting to be held on November 5th What is Tvk next plan


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->