ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தது தமிழக அரசு! எந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக அனுமதி மறுப்பு! 

தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி 51 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் இயக்கம் அனுமதி கேட்டு தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி இடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் மீது பரிசீலனை செய்யாததால் உயர்நீதிமன்றத்தை நாடினர்.

உயர்நீதிமன்றம் நெறிமுறைகளை வழங்கி பேரணி நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் காவல்துறையினர் அவர்களின் மனுவை பரிசினை செய்து தகுந்த வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன.

மத்திய அரசு கடந்த ஒரு வார காலமாக ஆபரேஷன் ஆக்டோபஸ் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் PFI இயக்கத்தை சேர்ந்த சுமார் 360 பேரை 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் என்ஐஏ மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் உள்ள திராவிட தலைவர்களின் சிலைகள் மீது செருப்பு மாலை அணிவிப்பது, உடைப்பது போன்ற சம்பவங்கள் சமூகவிரோதிகளால் நடைபெற்றது. இதன் காரணமாக திராவிட தலைவர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து அக்டோபர் 2ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு கட்சிகளை விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவளித்து கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக தெரிவித்து இருந்தார். 

இன்று தமிழக காவல்துறை பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி  எந்த இடத்திலும் ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் அக்டோபர் 2ம் தேதி அறிவித்துள்ள பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu government refused permission for RSS rally No settings allowed


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->