நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் விதிக்கப்படும் அபராதத்தொகை., தமிழக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கிலும், போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் சரியாக கடைபிடிக்கும் நோக்கிலும் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி போக்குவரத்துக்கு சட்டத்தில் சமீபத்தில் திருத்தும் செய்தது மத்திய அரசு. திருத்தும் செய்யப்பட்ட இந்த சட்டத்தில் போக்குவரத்துக்கு விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய சட்ட திருத்தும் இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பல மடங்கு அபராத உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், சட்டிஸ்கர், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் வைத்துள்ளன. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி, மக்களிடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைத்துள்ளன.

இதையடுத்து, பொது மக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாகவும், போலீசாருக்கும்-வாகன ஓட்டிகள் இடையே தகராறு ஏற்படுவதால், ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கான அபராத தொகையை ரூபாய் 1000-ல் இருந்து ரூபாய் 500 ஆக குஜராத் அரசு குறைக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற நிலையில், இரு சக்கர வாகனம் ஓட்டுனர்களுக்கு ரூ.2 ஆயிரமாகவும், 4 சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.3 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் தமிழகத்தில் அமல்படுத்தப்படாத நிலையில், அபராதத்தொகையை குறைத்து அதற்கான சட்டத்திருத்தத்தை செய்த பின்னர், விரைவில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil nadu government reduce fine amount


கருத்துக் கணிப்பு

5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா
கருத்துக் கணிப்பு

5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா
Seithipunal