இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் சந்திப்பு...! - பின்னணி என்ன...?
tamil Nadu Chief Minister Vijay surprise meeting young IAS officers What background
தமிழகத்தின் முதலமைச்சர் ஜோசப் விஜயை, 2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட இளம் ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் ராகுல் ராகவன், துஷார் சிங், அமன் திவாரி, ஜி.பி. நந்தனா, பி. பவித்ரா, பாட்டீல் குருஸ்னா பப்ருவன், சித்தார்த் போக்கார்னா, ஆர். மோனிகா, ஆர். ஸ்ரீ ரூசட், எஸ். சுபாஷ் கார்த்திக் மற்றும் சாய் சைதன்யா ஜாதவ் உள்ளிட்ட இளம் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக நிர்வாக சேவையில் புதிய பொறுப்புகளை ஏற்க உள்ள இளம் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் பல்வேறு நிர்வாக அனுபவங்கள், மக்கள் சேவை மற்றும் ஆட்சித் திறன் குறித்து கருத்துகளை பகிர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின்போது தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் மற்றும் பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
English Summary
tamil Nadu Chief Minister Vijay surprise meeting young IAS officers What background