இன்று தமிழக பட்ஜெட்: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயருமா? இன்றைய பட்ஜெட்டில் எகிறும் எதிர்பார்ப்பு! - Seithipunal
Seithipunal


2026-27 நிதியாண்டுக்கான தமிழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றான மகளிர் உரிமைத்தொகை உயர்வு அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் திருமணமான 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவதாக தவெக உறுதியளித்திருந்தது.

விஜய் முதல்வராக பதவியேற்ற உடனேயே இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரை மாதம் ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் நிதிநிலை சவாலாக இருப்பதும், மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியை எட்டியிருப்பதும், இந்த வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படாததற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை" திட்டத்தின் பெயர் "மதிப்புமிகு மகளிர் திட்டம்" என மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான முக்கிய அறிவிப்பு இடம்பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில் 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.15,600 கோடி அரசுக்கு செலவாகிறது.

இந்த தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் பட்சத்தில், திட்டத்திற்கான ஆண்டு செலவு கணிசமாக அதிகரிக்கும். இதனால் மாநில அரசின் நிதிச்சுமையும் உயரக்கூடும் என்பதால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பாக இன்று வெளியாகும் பட்ஜெட் அறிவிப்புகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Budget Today Will the women entitlement allowance rise to 2500 High expectations for today budget


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->