பொங்கல் பண்டிகையில் தமிழர் கலாசாரம்; பிரதமர் மோடி கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து சிறப்பித்தார்...!
Tamil culture Pongal festival Prime Minister Modi participated extended greetings and graced occasion
தமிழகத்தில் பாரம்பரியத்தின் மகிழ்ச்சியைத் தந்த பொங்கல் பண்டிகை, வீடுகளும் தெருக்களும் உற்சாகம் கொடுத்த வண்ணம் கொண்டாடப்படுகிறது. குடும்ப உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தமிழர்களின் மரபு, கலாசாரச் சிறப்புகளை நினைவுகூரும் விதமாக இந்த திருவிழாவை அனுபவிக்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ஆண்டுதோறும் போலி இல்லத்தில் பாரம்பரியத்துடன் பொங்கல் விழாவை நடத்தியுள்ளார்.
“ஒரே பாரதம் – உன்னத பாரதம்” என்ற நோக்கில் நடைபெறும் இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டும் சிறப்பித்தனர்.இந்த ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து, தமிழர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர்கள், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.பிரதமர் மோடி பேசியதாவது,“பொங்கல் என்பது தமிழர் வாழ்வின் அடிப்படையான விவசாயிகளையும், வேளாண்மையின் பெருமையையும் வெளிப்படுத்தும் சிறப்பான திருவிழா.
தமிழர் கலாசாரத்தில் உழவர் வாழ்வு வாழ்வின் ஆதாரம் எனக் கொண்டாடப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழரும் விவசாயிகளும் கொண்ட ஆழமான உறவை திருக்குறள் எடுத்துரைத்துள்ளது. இன்று, பொங்கல் உலகளாவிய திருவிழையாக மாறியுள்ளது. தமிழர்களுடன் இச்சிறப்பான திருவிழாவை கொண்டாடுவதில் எனக்கு மகிழ்ச்சி” என்று அவர் கூறினார்.
English Summary
Tamil culture Pongal festival Prime Minister Modi participated extended greetings and graced occasion