ஆம்பளையா இருந்தா நேரில் என்னுடன் மோதுங்கள்! அனைவரின் யூனிஃபார்மையும் கழட்டுவேன்! - Seithipunal
Seithipunal


திருச்சியை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண் தனக்கு சொந்தமான பள்ளி கட்டிடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் பாஜக பிரமுக சூர்யா கொலை மிரட்டல் பிடித்ததாக திருச்சி மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண் தனக்கு சொந்தமான பள்ளி கட்டிடம் மற்றும் வீட்டை பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் சூர்யா சிவாவின் மனைவி அத்திமாவுக்கு வாடகை விடுவதற்காக ஒப்பந்தம் போட்டு உள்ளார்.

இந்த ஒப்பந்தம் கடந்த மே மாதத்துடன் பள்ளியில் நடத்துவதற்கான ஒப்பந்தம் முடிவடைவதால் கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். 

ஆனால் சூர்யா சிவாவின் மனைவி கடந்த ஆறு மாதங்களாக வாடகை அளிக்காமல் காலி செய்யவும் மறுத்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஐந்து வருடங்களுக்கு வாடகை ஒப்பந்தத்தை நீட்டித்து தருமாறு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து ஆர்த்தி திருச்சி மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து விளக்கம் அளித்த சூர்யா சிவா "என் மீதான இந்த புகார் ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சட்டரீதியாக நான் எதிர்கொள்வேன். ஆர்த்தி என்பவர், நான் அந்த பெண்ணை மிரட்டியதாகவும் அவரது சொத்தை அபரிமிக்க முயல்வதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் மீது என்னை கைது செய்வதற்கு காவல் துறை தயாராக உள்ளது. இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். தமிழக காவல்துறை ஆளுங்கட்சியின் கூலிப்படை போல் செயல்பட்டு வருகிறது. 

ஆர்த்தி தனது பள்ளியை எங்களுக்கு பணம் பெற்று கொண்டு எங்கள் பெயரில் மாற்றி தருவதாக அரசு பதிவு துறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் எங்கள் கையில் உள்ளது. பின்னர் அந்த இடத்தை எங்களுக்கு வழங்காததால் மோசடி வழக்கை பதிவு செய்துள்ளோம். ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் காரணமாக என் மீது பொய் வழக்கு கொடுத்திருக்கிறார். நீதிமன்ற உத்தரவையும் மீறி என்னை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.

நான் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தேன் என என்ன ஆதாரம் இருக்கிறது? என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றம் அனுமதிப்பவருக்கு தொடருவேன். நானும் வழக்கறிஞர் தான். எல்லாருடைய சட்டையும் கழட்டவில்லை என்றால் நான் வழக்கறிஞர் இல்லை. நீதிமன்ற உத்தரவு இருக்கும் பொழுது நில அபகரிப்பு என புகார் அளித்திருப்பதை ஏற்றுக் கொண்டு என் மீது வழக்கு பதிவு செய்த அனைத்து அதிகாரிகளின் மீதும் வழக்கு தொடருவேன்.

அதிகபட்சமாக என்னை கைது செய்து சிறையில் அடைப்பீர்கள். நீங்கள் அதற்காகத்தான் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். என்ன பண்றீங்கன்னு நானும் பார்க்கிறேன். காத்துக் கொண்டிருக்கிறேன் உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்" என செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் "என் மேல் போடப்பட்ட பொய் வழக்குக்கான பதில் , ஆம்பளையா இருந்தா நேரில் என்னுடன் மோதுங்கள்" என தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, அமைச்சர் கே.என் நேரு, அன்பில் மகேஷ் மற்றும் காவல் துறையை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suryashiva warns tnpolice for land grab complaint


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->