ஓபிஎஸ் உடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு! எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் நெருக்கடி?! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின், அதிமுகவின் கட்சி திதிகளில் கொண்டுவரப்பட்ட அனைத்து மாற்றங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று, அதிமுகவின் உறுப்பினரான சுரேன் பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரின் அந்த மனுவில், ஜெயலலிதா மரணத்திற்கு முன்பாக இருந்த அதிமுகவின் கட்சி விதிமுறைகளை படி, ஒற்றை தலைமை என்பதே இருக்க வேண்டும். அந்த தலைமையும் கட்சி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று, வலியுறுத்தியுள்ளார். 

மேலும், "இதற்கு ஏற்றார் போல் அதிமுகவின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கட்சி விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், திருத்தங்கள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் சுரேன் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் தனது மனுவை ஓ பன்னீர்செல்வம் கொடுத்துள்ள அதிமுக பொதுக்குழு (இபிஎஸ்) செல்லாது என்று அறிவிக்க கூறிய மனுவுடன் இணைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுரேன் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நெருக்கடியை கொடுக்கவே தொடரப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suren palaniswamy appeal to SC ADMK OPS vs EPS


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->