புழல் சிறையில் திடீர் ஆய்வு... கைதிகளின் வசதிகளை நேரில் ஆய்வு செய்த விஜய்...! - Seithipunal
Seithipunal


சென்னை புழல் மத்திய சிறைக்கு திடீரென சென்ற முதல்-அமைச்சர் விஜய், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். அவரது திடீர் வருகையால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை புழல் சிறை வளாகத்தில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை மற்றும் மகளிர் சிறை என மூன்று பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், புழல் மத்திய சிறைக்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய், கைதிகளின் தற்போதைய நிலை, அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் சிறை நிர்வாகத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கைதிகளுக்கு தயாரித்து வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்கும் சமையல் கூடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கைதிகளுக்கு தேவையான வசதிகள் முறையாக கிடைக்கிறதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், சிறையின் ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் கைதிகளின் நலன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.

இந்த திடீர் ஆய்வின்போது உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். முதல்-அமைச்சரின் நேரடி ஆய்வு, புழல் சிறையின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் கைதிகளுக்கான வசதிகள் மீது கவனம் ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden inspection Puzhal Prison Vijay personally inspected facilities prisoners


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->