கடும் தாக்கு! பீகாரிலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பாஜக அபகரிக்க முயல்கிறது!!! - ராகுல் காந்தி
Strong attack BJP is trying to usurp power by abusing power in Bihar too Rahul Gandhi
ஒடிசா மாநிலத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான 'ராகுல்காந்தி' நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"மகாராஷ்டிராவை போன்று, பீகாரிலும் தேர்தலை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

நாடு முழுவதும் நமது அரசியலமைப்பை பாஜக தாக்கிக் கொண்டு வருகிறது.நேற்று இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகாரில் தேர்தலை பாஜக அபகரிப்பதை தடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதன் வேலையை செய்யவில்லை.
பாஜகவின் நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது.பாஜக ஐந்து முதல் ஆறு முதலாளிகளுக்காக அரசாங்கத்தை நடத்துகிறது. நாட்டின் பொது மக்களுக்கான பணி செய்யவில்லை.
"ஜல், ஜங்கல், ஜாமின்" பழங்குடியினருக்கு சொந்தமானது. அவைகள் அவர்களுக்கே இருக்கும். வன உரிமைப் பட்டாக்கள் பழங்குடியினருக்கு வழங்கப்படவில்லை.
காங்கிரஸ் PESA மற்றும் பழங்குடி மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த சட்டங்களை நாங்கள் அமல்படுத்துவோம், பழங்குடியினருக்கு அவர்களின் நிலம் கிடைப்பதை உறுதி செய்வோம்" என்று தெரிவித்தார்.
English Summary
Strong attack BJP is trying to usurp power by abusing power in Bihar too Rahul Gandhi