வள்ளுவர் வழியில் ஸ்டாலின் ஆட்சி: தமிழ்நாட்டுக்கு நான்கு உறுதியான வாக்குறுதிகள்...!
Stalins rule follows path Valluvar Four firm promises Tamil Nadu
வான்புகழ் பெற்ற வள்ளுவரை நினைவு கூறும் இந்தப் புனித திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு நான்கு உறுதியான வாக்குறுதிகளை அளிக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“அஞ்சாமை, மனிதநேயம், ஈகை, அறிவூக்கம் – வள்ளுவன் வகுத்த இந்த நான்கு நற்பண்புகளே நமது ஆட்சியின் அசைக்க முடியாத அடித்தளம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” என்ற திருவள்ளுவரின் குறளை சுட்டிக்காட்டி,சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகத் தைரியமாகக் களம் காணும் உறுதி,
வறியோர் மற்றும் எளியோர் வாழ்வை உயர்த்தும் மனிதநேயத் திட்டங்கள்,
இளைய தலைமுறையின் அறிவாற்றலை வளர்க்கும் தொலைநோக்குச் செயல்திட்டங்கள்,
தொழில் வளர்ச்சியும் மகளிர் மேம்பாடும் இணைந்து பயணிக்கும் ஆக்கபூர்வ முயற்சிகள்
இந்த நான்கும் தமிழ்நாட்டில் இடையறாது தொடரும் என்பதே, இந்த திருவள்ளுவர் நாளில் மக்களுக்குத் தரும் எனது உறுதியான வாக்குறுதி என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Stalins rule follows path Valluvar Four firm promises Tamil Nadu