தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன..? மின்வெட்டு குறித்து ஸ்டாலின் சாடல்..!
Stalin criticizes TVKs governance regarding power cuts
தமிழகத்தில் தவெக அரசு ஆட்சுக்கு வந்ததில் இருந்தும் மாநிலம் முழுவதும் பெரும்வாரியான நாட்களில் பல பகுதிகளில் மின்வெட்டுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே பரவலாக மின்வெட்டு புகார்கள் தமிழக அரசின் மின்சாரத்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், தவெக அரசின் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், ''இரண்டு நாட்களுக்கு முன், மின் வாரியத் தலைமையகத்தில் முதல்வர் ரிவ்யூ செய்யவில்லை. ரீல்ஸ்தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல''என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின் வாரியத் தலைமையகத்தில் முதல்வர் ரிவ்யூ செய்யவில்லை. ரீல்ஸ்தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல''என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Stalin criticizes TVKs governance regarding power cuts