'தற்போது நிலவும் மின்தடை விவகாரத்தில் இந்த அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது'; எஸ் எஸ். சிவசங்கர் சந்தேகம்..! - Seithipunal
Seithipunal


சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மின்தடை ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், புதிய காரணங்களைக் கூறித் தப்பிக்க முயலாமல் தடையற்ற மின்சாரம் வழங்க உடனடியாக முன்வர வேண்டும் என்று குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அரசியலூர் மாவட்ட திமுக செயலளாருமான எஸ் எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; அண்மையில் பொறுப்பேற்றுள்ள புதிய மின்சாரத் துறை அமைச்சர், மின்வாரியத்தின் கடன் சுமை, பணியாளர்கள் பற்றாக்குறை குறித்துப் பேசி வருகிறார். மின்பற்றாக்குறை நிலவுவது உண்மையானால், அதுகுறித்து அரசு ஏன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தித் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுப்பியுள்ளார். 

அத்துடன், இதே கடன் சுமையையும், இதே பணியாளர்கள் பற்றாக்குறையையும் வைத்துக் கொண்டுதான், கடந்த காலங்களில் தி.மு.க அரசு தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது நிலவும் மின்தடை விவகாரத்தில் இந்த அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன், ஒன்றிய அரசு மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்கும் கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த காலங்களில் திமுக அரசு இத்தகைய தனியார்மயமாக்கல் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது. ஆனால், தற்போதைய அரசு மின்பற்றாக்குறை இருப்பது போன்ற இக்கட்டான சூழலை உருவாக்கி, ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு வழிவகுக்க நினைக்கிறதா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SS Sivasankar suspects that this government harbors an ulterior motive regarding the prevailing power outage issue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->