பொருளாதார நெருக்கடி.. மீண்டும் இந்தியாவை நாடும் இலங்கை அரசு..! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா - இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இருவரும் விவாதித்தனர். 

இலங்கைக்கு கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்தியா உரம் கொடுத்து உதவுமாறு அப்போது அமைச்சர் மகிந்த அமரவீரா கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இலங்கையில் நெல் சாகுபடிக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா கடந்த மாதம் ஒப்புக்கொண்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri lanka seeks help from india


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->