'தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடக்கிறது; மு.க.ஸ்டாலினைப் போல உங்களுக்கு ஒரு தலைவர் கிடைக்க மாட்டார்'; புளியந்தோப்பு பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு..!
Speaking at a campaign event in Pulianthope Arvind Kejriwal stated that excellent governance is prevailing in Tamil Nadu
2026- ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 02 நாட்களில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சிகளும் தங்களது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, திமுக மாறும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை புளியந்தோப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரையில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது;
தமிழ்நாடு மக்களின் மத்தியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பது பார்க்க முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போல உங்களுக்கு ஒரு தலைவர் கிடைக்க மாட்டார். தமிழ்நாட்டுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் மு.க.ஸ்டாலின் பாடுபடுகிறார் என்று பெருமிதமாக பேசியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போல வேறு எந்த மாநிலத்திலும் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை என்றும், டெல்லியில் இலவச மருத்துவ சிகிச்சை திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட்டது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகையை முதலமைச்சர் வழங்கி வருகிறார். உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவித் தொகை திட்டம் எந்த மாநிலத்திலும் கிடையாது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்கள் இனியும் தொடர வேண்டும் புளியந்தோப்பு பிரச்சாரத்தில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
English Summary
Speaking at a campaign event in Pulianthope Arvind Kejriwal stated that excellent governance is prevailing in Tamil Nadu