சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி...! - கேரள பிரச்சாரத்தை ரத்து செய்த ராகுல் காந்தி...! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் முன்னணி தலைவர் சோனியா காந்தியின் திடீர் உடல்நலக் குறைவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை சீர்குலைந்ததால், அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்பே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கவலைக்கிடமான நிலை எதுவும் இல்லை என்றாலும், அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதன் தாக்கமாக, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, கேரளாவில் இன்று தொடங்க இருந்த தேர்தல் பிரச்சார பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.

கோழிக்கோட்டில் நடைபெறவிருந்த யுடிஎஃப் கூட்டணியின் முக்கிய பிரச்சார தொடக்க நிகழ்ச்சி இதனால் மாற்றம் கண்டுள்ளது.முன்னதாக, அந்த மேடையில் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதிகளை விரிவாக விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பொறுப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்கிறார்.

தேசிய மற்றும் மாநில அளவிலான பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி, ராகுல் இல்லாமலேயே நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sonia Gandhi admitted hospital Rahul Gandhi cancels Kerala campaign


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->