அவருக்கு ஏற்பட்ட நிலை சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்டு விடக்கூடாது...! - சு.வெங்கடேசன் கவலை - Seithipunal
Seithipunal


துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீஷ் தன்கர், கடந்த ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சியளித்தார்.இதற்கு காரணமாக, தனக்கு உடல்நலக்குறைவு அதனால் தான் ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.மேலும்,  ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்?என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதனிடையே வி.சி.க. தலைவர் திருமாவளவன்,முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டினார்.இதைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் ,"ஜகதீப் தன்கர் என்னவானார்? இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை" என்று  தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறதல்லவா?" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

situation that happened him should not happen sb Radhakrishnan Su Venkatesan is concerned


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->