மரணத்தைத் தவிர வேறு வழியில்லை.. SIR பணிச்சுமையால் குஜராத்தில் ஆசிரியர் தற்கொலை!
SIR Issue Election Commission gujarat teacher suicide
குஜராத் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்காக (SIR) வாக்குச்சாவடி நிலை அலுவலராக (BLO) நியமிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் ஒருவர், மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தேவ்லி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அரவிந்த் வதேர் (23), நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தற்கொலைக் கடிதம்
அரவிந்த் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், வாக்காளர் திருத்தப் பணியைத் தொடர முடியவில்லை என்றும், அதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மரணத்தைத் தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் என்.வி. உபாத்யாய் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அரவிந்த் ஒரு சிறந்த BLO என்றும், அவரது வாக்குச்சாவடியில் 40 சதவீதப் பணிகளை முடித்திருந்தார் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொடரும் சம்பவங்கள்
தேர்தல் பணிகளில் நியமிக்கப்படும் அலுவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை குறித்த கவலையை இந்தச் சம்பவம் மீண்டும் கிளப்பியுள்ளது. கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் BLO-க்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
SIR Issue Election Commission gujarat teacher suicide