சிறிதுகாலத்தில் மக்கள் தொகையில் இந்துக்களுக்கு நிகராக முஸ்லிம்கள் இருப்பார்கள்...!-அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா - Seithipunal
Seithipunal


அண்மையில் அசாம் மாநிலத்தின் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவிக்கையில்," மக்கள்தொகையை மாற்றுவது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது 40% உள்ளது. 1951-ல் 12% இருந்த முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை தற்போது 28% அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதனால் தேர்தலில் பல மாவட்டங்களை இழந்துள்ளோம்" எனத் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று நிருபர்களைச்  சந்தித்தார்.

ஹிமந்த பிஸ்வா சர்மா:

அப்போது அவர் தெரிவித்ததாவது,"அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் மக்கள்தொகையின்படி பார்த்தால் வரும் 2041-ம் ஆண்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கைக்கு சமமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

முஸ்லிம்கள் எண்ணிக்கை 50% தொட்டு விடும்" எனத் தெரிவித்தார்.இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

short time Muslims equal Hindus population Assam Chief Minister Himanta Biswa Sarma


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->