டெல்லியில் அதிர்ச்சி புகார்! என்னை பயங்கரவாதி என கூறி கைது செய்யப் போகிறார்கள்! - எம்.பி. சண்முகம் அலறல்
Shocking complaint Delhi going arrest me by calling terrorist MP Shanmugam screams
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மற்றும் மேல்சபை எம்.பி. சி.வி. சண்முகம், டெல்லி பாராளுமன்ற தெரு போலீஸ் நிலையத்தில் பரபரப்பூட்டும் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,"காலை பாராளுமன்றத்திற்கு செல்லும் முன், அறிமுகமில்லாத நபர் ஒருவர் எனக்கு போன் செய்தார்.

ஆங்கிலத்தில் பேசி, தன்னை மும்பை காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.உடனே அவர்,“நீங்கள் ஒரு பயங்கரவாதி. சில நொடிகளில் கைது செய்வோம்”என பேரத்துடன் மிரட்டினார்.இதன் பின் அந்த அழைப்பு, தன்னை “மூத்த போலீஸ் அதிகாரி” என கூறிக்கொண்ட மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது.
அவர் பொய்யான குற்றச்சாட்டுகளை குவித்து,“உன் மீது 17 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன”என்று மேலும் அச்சுறுத்தியதாக சண்முகம் தெரிவித்தார்.“ஒரு இராஜ்யசபை எம்.பியை நேரடியாக குறிவைக்கும் அளவுக்கு மோசடி கும்பல்கள் தைரியமாகியுள்ளன.
இத்தகைய அச்சுறுத்தல்கள் உயர்ந்து வருவது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு,”என்று கூறிய சண்முகம், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
Shocking complaint Delhi going arrest me by calling terrorist MP Shanmugam screams