கேப்டன் காட்டிய பாதையில் மக்கள் சேவை...! - விருத்தாச்சலம் தொகுதிக்கு ஓடோடிச் சென்று பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சிப் பதிவு...! - Seithipunal
Seithipunal


பிரேமலதா விஜயகாந்த், விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “விருத்தாச்சலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நேரில் சென்று, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எனக்கு வெற்றியை வழங்கிய மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறேன்.

மக்கள் அளித்துள்ள பேராதரவும், அன்பும், நம்பிக்கையும் எனக்கு மிகப்பெரிய பொறுப்பையும் கடமையுணர்வையும் வழங்கியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கேப்டன் விஜயகாந்த் காட்டிய மக்கள் பாதையை என்றும் பின்பற்றி, பொதுமக்களுடன் இணைந்து அவர்களின் தேவைகள், குறைகள் மற்றும் அன்றாட பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து செயல்படுவேன்” என அவர் உறுதியளித்துள்ளார்.

அதேபோல், “மக்கள் சேவையே எங்களது அரசியல் பயணத்தின் அடித்தளமாகவும், முதன்மை இலக்காகவும் இருந்து வருகிறது. அந்த நோக்கத்துடனேயே இனியும் உழைப்பேன்” என பிரேமலதா விஜயகாந்த் தனது பதிவில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Serving people path shown by captain Premalatha Vijayakanth runs Vriddhachalam constituency and records resilience


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->