செந்தில்பாலாஜி - முதல்வர் ஸ்டாலின்! மர்மம் என்ன? புயலை கிளப்பு பாஜக!
Senthilbalaji CM Stalin BJP Annamalai Question
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்.
இதற்கு தமிழக ஆளுநர், அதிமுக, பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நீதிபதிகள் முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளனர்.
அதில், இலாகா இல்லாத அமைச்சராக இருப்பது கேலிக்குரியது. அவரால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை.

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது நல்லாட்சி மற்றும் தூய்மையான ஒரு நிர்வாகத்திற்கு உகந்தது அல்ல என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மற்ற அமைச்சர்களுக்கு இதுபோல் பிரச்சனை வந்தால் முதல்வர் காப்பாற்றுவாரா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
English Summary
Senthilbalaji CM Stalin BJP Annamalai Question