செந்தில் பாலாஜியின் சிறைவாசம் முடிவுக்கு வருமா? ஜாமீன் மனு இன்று விசாரணை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு மே மாதம் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் அவர்களைத் தொடர்ந்து ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். 

கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அதனை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக தனக்கு ஜாமீன் வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி  முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ததில் "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும், அவர் ஜாமினில் வெளி வைத்தால் விசாரணை சரியான முறையில் நடைபெறாது எனவும்' வாதிட்டார். 

இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை இன்று ஒத்தி வைத்துள்ளார். அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி மூன்றாவது முறையாக ஜாமீன்வழங்க கோரி தாக்கல் வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.  செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது அமலாக்கத்துறையின் வாதத்தினை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் வரும் நிராகரிக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji Bail petition heard today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->