பரபரப்பு பேச்சு! திமுகவின் 100 வாக்குகளில் 25 வாக்குகள் விசிக உடையது...! - திருமாவளவன் - Seithipunal
Seithipunal


இன்று சிதம்பரம் லால்குளத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் மறைந்த எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு மண்டபம் திறப்பு நடைபெற்றது.

அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நூற்றாண்டு மண்டபத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் 'திருமாவளவன் எம்.பி.' உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமாவளவன்:

அப்போது விழாவில் திருமாவளவன் தெரிவித்ததாவது,"சிதம்பரத்தில் நந்தனாருக்கு மணிமண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு நூற்றாண்டு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சிக்காக நந்தனார் பாடுபட்டார்.

காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சிநாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் எல். இளையபெருமாளுக்கு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எல்.இளையபெருமாள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு அறிக்கை வெளியிட்டார்.1931-ம் ஆண்டு மக்கள் தொகையில் ஒன்றரை சதவீதம் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி வளர்ச்சி பெற்று இருந்தனர்.

தற்போது 78 சதவீதம் பட்டியலின மக்கள் கல்வி வளர்ச்சி பெற்றுள்ளனர். திராவிட மாடல் ஆட்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார். அதே போல் தற்போது தி.மு.க. அரசும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

மீண்டும் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும். தமிழர்கள் ஓரணியில் திரள்வோம். 2026-ல் தி.மு.க ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைப்போம்.தி.மு.க. கூட்டணிக்கு விழும் வாக்குகளில் 4-ல் ஒரு வாக்கு வி.சி.க.வுடையதாக இருக்கும். அதாவது 100 வாக்குகளில் 25 வாக்குகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி உரியதாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sensational talk Out of 100 votes of DMK 25 votes belong to VKC Thirumavalavan


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->