நட்பு பாராட்டுகிறார்களா? என்ன? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த செங்கோட்டையன்...!
Sengottaiyan wished AIADMK General Secretary Edappadi Palaniswami a happy birthday
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ''எடப்பாடி பழனிசாமி'' அவர்களின் பிறந்தநாள். அவர் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு நேரில் மற்றும் சமூக வலைத்தளங்களில்,வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த முன்னாள் அமைச்சர் 'செங்கோட்டையன்' பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது.
English Summary
Sengottaiyan wished AIADMK General Secretary Edappadi Palaniswami a happy birthday