புதிய வானூர்தி நிலையம் வேண்டுமென்று மக்கள் யாரேனும் போராடினார்களா? -  சீமான் கேள்வி.! - Seithipunal
Seithipunal


விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி 13 கிராம மக்களுடன் சீமான் நேரடி கள ஆய்வு நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது. "புதிய வானூர்தி நிலையத்திற்கு இப்போது என்ன தேவை ஏற்பட்டுள்ளது? என்பது தான் நாம் எழுப்பும் கேள்வி. ஏற்கனவே இருக்கும் வானூர்தி நிலையம் என்ன ஆனது? அதில் சென்று யாரும் பயணம் செய்ய விரும்பவில்லையா? இத்தனை ஆயிரம் ஏக்கரில் ஒரு புதிய வானூர்தி நிலையம் வேண்டுமென்று மக்கள் யாரேனும் போராடினார்களா? அல்லது கோரிக்கை மனு ஏதும் கொடுத்துள்ளார்களா? ஒன்றுமே இல்லை.

4800 ஏக்கர் பரப்பளவில், புதிய வானூர்தி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதில் பல கிராமங்கள், பலாயிரக்கணக்கான விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. 40 க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள், 2605 ஏக்கர் சதுப்பு நிலப்பகுதி, 955 ஏக்கர் நீர்நிலைகள், இதையெல்லாம் காலிசெய்துவிட்டு புதிய வானூர்தி நிலையம் அமைப்பதை வளர்ச்சி என்கிறார்கள். 

2035 ஆம் ஆண்டில் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கும் அளவிற்கு வசதி வந்துவிடும் என்கிறார்கள். 2022 ஆம் ஆண்டில் தொடங்கி 2028 ஆம் ஆண்டிற்குள் ஆறு ஆண்டுகளில் இதை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். இல்லையெனில் 2035 ஆம் ஆண்டில் வாழும் மக்களின் தேவைக்கு நிறைவு செய்ய முடியாது என்கிறார்கள். இவ்வளவு தொலைநோக்கோடு சிந்திக்கும் பெருமக்கள், மக்களின் நீர்தேவை, உணவுத்தேவையை நிறைவேற்ற ஏதாவது திட்டம் தீட்டியுள்ளார்களா?

ஒவ்வொரு முறையும் சென்னை, வெள்ள சேதத்தை எதிர்கொள்கிறது. கழிவுநீர், மழைநீர் தேக்கமின்றி வழிந்தோடுவதற்கு ஏதாவது திட்டமிட்டுளார்களா? தலைநகரிலேயே இன்னும் பாதை சரியாக அமைக்காமல் இருக்கிறது. சென்னை வானூர்தி நிலையத்திலேயே நூறு முறைக்கு மேலாக கண்ணாடி இடிந்து விழுந்துள்ளது. அதையெல்லாம் சரி செய்யாமல் புதிதாக இவ்வளவு பெரிய வானூர்தி நிலையம் எதற்காக? 

ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் கட்டப்பட்டதை முன்னுதாரணம் காட்டி வளர்ச்சி என்கிறார்கள். அதை சுற்றியுள்ள பகுதியில் வாழும் அடிதட்டு மக்கள் வளர்ச்சி அடைந்துவிட்டார்களா? ஒரு வானூர்தி நிலையத்தால், நாடு பெரிதாக வளர்ந்துவிடும் என்பது எப்படி ஏற்புடையது? வானூர்தியில் பறக்கும் ஒருவருக்கு பசிக்காதா? உணவு எங்கிருந்து கிடைக்கும்? விளைநிலங்களின் வளங்களே இந்த நாட்டில் மிகக்குறைவாக இருக்கிறது. சாலை அமைப்பது, வானூர்தி நிலையம் கட்டுவது என்று பலாயிரக்கணக்கில் விளைநிலங்களை பறிக்கின்றீர்கள். இது எவ்வளவு பெரிய பேராபத்து” என்று சீமான் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman say about parandur airport 1


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->