பள்ளிகள் கல்வி கற்க மட்டும்தான்...! சாதிப் பிரிவினைக்கு இடமில்லை...! - அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்...!
Schools only education There no place caste division Minister Rajmohan plan
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கல்வித்துறை, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பள்ளி நிர்வாகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.அப்போது பேசிய அவர், போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவித்தார்.

சமூகத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களின் அடிப்படைக் காரணமாக போதைப்பொருள் பழக்கம் மாறி வருவது வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பெருமளவில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் போதையற்ற தமிழகம் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.பள்ளிக்கல்வித்துறையில் நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தேவையான நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.மேலும், உலக நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்கள் கூட ஒரு கட்டத்தில் முடிவுக்கு வருகின்றன என்றால், பள்ளிகளில் எழும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் ஒழுங்கு விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிவித்த அவர், மாணவர்களை எவ்வாறு அணுக வேண்டும், அவர்களின் மனநிலையை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
பள்ளி வளாகங்களில் மாணவர்கள் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான கயிறுகள் அல்லது சின்னங்களை அணிவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.தனது பள்ளிப் பருவத்தை நினைவுகூர்ந்த அவர், தானும் குங்குமம் மற்றும் விபூதி அணிந்தபடியே பள்ளிக்குச் சென்று வந்ததாக கூறினார்.
ஆனால் கல்வி நிலையங்களில் சாதி அடையாளங்களை ஊக்குவிக்கும் எந்தவித நடைமுறைகளுக்கும் இடமளிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.சாதி கயிறு தொடர்பான விவகாரத்தில் தற்போது பள்ளிகளில் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
English Summary
Schools only education There no place caste division Minister Rajmohan plan