மீண்டும் மீண்டுமா? பிரதமர் மோடியின் பேச்சை புகழ்ந்து பேசிய சசி தரூர்: காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி!
sasitharur wish to pm modi bjp congress
முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், சமீப காலமாகப் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசி வருவது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சசி தரூர், நேற்று தனது எக்ஸ் தளப் பதிவில் ஒரு நிகழ்ச்சியில் தான் பார்வையாளராகப் பங்கேற்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
பிரதமரின் பேச்சு: டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா என்பது வளரும் சந்தை மட்டுமல்ல, உலக நாடுகளுக்காக வளர்ந்து வரும் மாதிரி" என்று கூறியதை சசி தரூர் சுட்டிக்காட்டியுள்ளார். கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட நிச்சயமற்ற சர்வதேச சூழலுக்கு நடுவிலும் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வருவதைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார் என்றும் அவர் விளக்கினார்.
பாராட்டு: மேலும், பிரதமரின் உரை, பிரிட்டனைச் சேர்ந்த மெக்காலேவின் 200 ஆண்டு அடிமை மனப்பான்மை மரபை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது என்றும் சசி தரூர் பாராட்டினார். "இந்தியாவின் பாரம்பரியம், மொழிகள் மற்றும் அறிவியல் மரபுகளின் பெருமையை மீட்டெடுக்க 10 ஆண்டு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்ததையும் தரூர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கும் சசி தரூருக்கும் இடையே ஏற்கெனவே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மோடியின் பேச்சைப் பகிரங்கமாக ஆதரித்து அவர் வெளியிட்ட இந்தப் பதிவு, கட்சிக்குள் மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
English Summary
sasitharur wish to pm modi bjp congress