அதிரும் அரசியல் களம்.. "சசிகாந்த் செந்திலுக்கு" முக்கிய பொறுப்பு.. காங்கிரஸ் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையர்கள், டிஜிபி, மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சென்னையில் இந்திய தேர்தல் ஆணையர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி சந்தித்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. பாஜகவை வீழ்த்த எதிர் கட்சிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இண்டி கூட்டணியில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. குறிப்பாக தொகுதி பங்கீடு, பிரதமர் வேட்பாளர்  விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இது ஒரு ஒரு புறம் இருக்க கர்நாடகாவில் நடைபெறறு முடிந்த  சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி இறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதற்கு காரணம் மாநில வார் ரூம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆவார். இவர் கர்நாடக மாநில வார் ரூம் தலைவராக செயல்பட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில் வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் மத்திய வார் ரூம் தலைவராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikanth Senthil has a key role in national Congress


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->