தமிழகத்திற்கு மத்திய அரசு உடனே நிவாரண தொகை வழங்க வேண்டும்.. சசிகலா வேண்டுகோள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், இதிலிருந்து மீண்டு வர மத்திய அரசு உரிய நிவாரணத் தொகையை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் வேலூர், கன்னியாகுமரி, திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

பல இடங்களில் ஏழை எளிய மக்கள் தங்கள் குடிசை வீடுகளில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கிய நிலையில் வாழ வழியின்றி மிகவும் துன்பப்படுகின்றனர். பல இடங்களில் வீடுகள்  இடிந்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர மத்திய அரசு உரிய நிவாரணத் தொகையை தமிழகத்திற்கு உடனே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala statement on nov 24


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->