ஹிந்துக்களின் இதயத்தை வென்ற மன்னர் "மோடி".!! கொளுத்தி போட்ட சசி தரூர்.!! - Seithipunal
Seithipunal


சர்ச்சைக்கு பெயர் போன காங்கிரஸ் கட்சியின் மூத்த  சசி தரூர்  திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் 2009, 2014, 2019 தேர்தல்களில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தேசியத் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து சசி தரூர் போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் தலைமையின் ஆதாரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இருந்ததால் அவர் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தன தனது கடைசி தர்தல் என சசி தரூர் அறிவித்துள்ளார் . 


திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சசி தரூர் "அரசியலில் இறுதி எதுவும் இல்லை என்பார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. அரசியலிலும் இளைஞர்களுக்கு வழி விடுவதற்கான நேரம் அனைவருக்கும் வரும். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரத்தில் போட்டியிட்டால் அதுவே எனது கடைசித் தேர்தலாக இருக்கும் என கூறியதை மறுக்கவில்லை. இதுதான் எனது கடைசி தேர்தலாக இருக்கும் என நம்புகிறேன். திருவனந்தபுரத்தில் எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துப் போட்டியிட்டால், மக்களுக்காக முழு மூச்சாக பாடுவேன்" என தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேர்தல் வியூகம் குறித்து தனது எக்ஸ் வலைதள பதிவில் "அயோத்தியில் ஜனவரியில் ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தொடர்ந்து அபுதாபியில் பிப்ரவரியில் ஹிந்து கோயில் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலும் வர இருக்கிறது. இதன் மூலம் 'ஹிந்துக்களின் இதயத்தை வென்ற மன்னர்' என்று மோடியை முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதுவே அவர்களது தேர்தல் வியூகம்.
கடந்த தேர்தல்களில் அவர்கள் கூறிய நல்ல நாள்கள், ஒரே ஆண்டில் 2 கோடி பேருக்கு வேலை, பொருளாதார வளர்ச்சி தொடர்பான வாக்குறுதிகள் என்னவாகின என்பது தெரியவில்லை' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasi tharoor said lok sabha polls will be my last election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->