தனது தோல்வியையே அதிமுகவுடன் திமுக! சங்கரன்கோயில் அரசியல் களேபரம்!
sankaran koyil admk dmk
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், திமுகவின் உமாமகேஸ்வரி நகராட்சி தலைவர் பதவியில் இருந்தவர். ஆனால், அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், அவர் பதவியை இழந்தார். 30 வார்டுகள் கொண்ட நகராட்சியில், வாக்கெடுப்பில் 28 கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்; திமுகவின் ஒரே ஒரு கவுன்சிலர் மட்டும் எதிராக வாக்களித்தார்.
ஆரம்பத்தில், 12 வார்டுகளில் அதிமுக, 9-இல் திமுக, 2 மதிமுக, ஒரு வார்டு காங்கிரஸ், ஒரு வார்டு எஸ்டிபிஐ, 5-இல் சுயேட்சை உறுப்பினர்கள் வென்றனர். 15-15 என்ற சம வாக்குகளால், குலுக்கல் முறையில் திமுகவின் உமாமகேஸ்வரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதலில் நகராட்சி கூட்டங்கள் சுமூகமாக நடந்தாலும், பின்னர் திமுக கவுன்சிலர்களே தலைவருடன் கருத்து முரண்பட்டனர். அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை, முறைகேடுகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2023ல் வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் திமுக தலைமையின் சமரசத்தால் தப்பியது.
தொடர்ந்து கடந்த மாதம் 24 கவுன்சிலர்கள் மறுமுறையாக தீர்மான மனுவை அளித்தனர். திமுக முயற்சித்த சமாதானம் பலனளிக்காத நிலையில், இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் தீர்மானம் வெற்றி பெற்றது. இதன் மூலம், உமாமகேஸ்வரி பதவிநீக்கம் செய்யப்பட்டார். புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
இதற்கிடையே இந்த வெற்றியை அதிமுக கவுன்சிலர்களுடன் இணைந்து திமுக கவுன்சிலர்கள் கொண்டாடியதும் பேசு பொருளாகியுள்ளது.