புரட்சிக் கவிஞருக்கு வீரவணக்கம்...! பாரதிதாசனின் கனவை நனவாக்குவோம்...! - சீமான்
Salute revolutionary poet Let make Bharathidasan dream come true Seeman
புரட்சிச் சிந்தனையாலும் சமூக நீதி கோஷங்களாலும் தமிழ்மண்ணை விழித்தெழச் செய்த மாபெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136-வது பிறந்தநாள் இன்று உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த முக்கிய நாளை முன்னிட்டு, சீமான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாரதிதாசன் எழுதிய தீப்பொறி கவிதை வரிகளை நினைவூட்டி, தமிழ்ச் சமூகத்தின் விழிப்புணர்வைத் தூண்டிய அவரது பங்களிப்பை உயர்த்திப் பேசியுள்ளார்.

அதில்,"வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனது தாய்மிக உயிர்வாதை யடைகிறாள்
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!'
நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்
நாம்! தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய் குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டோடு போயிற்றுக் கொட்டடா முரசம்!'
"செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே'
சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம்;
செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்
பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு;
போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு!.உணர்வின்றி உறங்கிக் கிடந்த தமிழ்ச் சமூகத்தின் உள்ளங்களை, தீப்பொறி வார்த்தைகளால் விழித்தெழச் செய்த தமிழ்ப்பெரும் புலவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று உற்சாக உணர்வோடு நினைவுகூரப்படுகிறது.
தமிழ்த்தேசிய உரிமைகளுக்கும் விடுதலைக் கனவுகளுக்கும் உறுதுணையாக நிற்கும் இளந்தலைமுறை, தங்கள் வழிகாட்டியாகத் திகழும் ‘தாத்தா’ பாரதிதாசனின் கவிதைகளை தாய்ப்பாலுக்கு இணையாக உள்ளத்தில் ஏந்தி, உணர்ச்சி விழிப்புடன் பெருமிதக் குரலில் அவரது புகழுக்கு வணக்கம் செலுத்துகிறது.
அவரது புரட்சிச் சிந்தனைகளையும் கனவுகளையும் எந்தவித சமரசமும் இன்றி நிறைவேற்றும் வரை இடையறாது போராடுவோம் என்ற உறுதியை இந்நாளில் ஏற்றுக்கொள்கிறோம்.தமிழ்ப்பேரினத்தின் ஒளிவிளக்காக விளங்கும் பாவேந்தர் பாரதிதாசனின் பெருமைமிகு புகழை என்றும் போற்றி காக்க வேண்டும் என்ற உறுதியுடன், “நாம் தமிழர்” என்ற முழக்கத்துடன் அவர் தெரிவித்தார்.
English Summary
Salute revolutionary poet Let make Bharathidasan dream come true Seeman