ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டுறவுத்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடையடைப்பு மற்றும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளதால், ரேஷன் பொருட்கள் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அகவிலைப்படி உயர்வு, கடையடைப்பு கடைக்கு தனித்துறை, பொட்டலம் முறை என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆயத்த கூட்டத்தில் ஜூன் 7,8,9 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. 

அதேபோல ஜூன் 13-ஆம் தேதி முதல் தொடர் வேலை கடையடைப்பு நடைபெறும் என திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. No work no pay என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடிக்க மண்டல இணைப்பதிவாளர் கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian shop workers strike no work no pay


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->