பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!! மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ. 13,809 கோடி, கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ. 3,500 கோடி ஒதுக்கீடு!!!
Rs13809 crore allocated for womens rights Rs3500 crore allocated for the Dream Home project
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் நடப்பு 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விபரம் இனி காண்போம்.
அதில்," உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.1 கோடி வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் அமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு.ராமதாதபுரத்தில் நாவாய் அருட்காட்சியகம் அமைக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு.கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு.

கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.அனைத்து நகர்ப்புறங்களிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.3,700 கோடி ஒதுக்கீடு.முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 6,100 கி.மீ நீள சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு. எழும்பூரில் அருங்காட்சியக வளாகத்தில் சிந்துவெளி பண்பாடு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு.சீராக இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் கட்டி தரப்படும். ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டப்படும்.மேலும் ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் அமைக்கப்படும்.ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டத்திற்கு ரூ.2,423 கோடி ஒதுக்கீடு.7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.6,668 கோடி ஒதுக்கீடு.
மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு. 10 ஆயிரம் பெண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்படும். இதற்கு ரூ.37 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கு.சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது .
English Summary
Rs13809 crore allocated for womens rights Rs3500 crore allocated for the Dream Home project