ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உதவித்தொகையா? பலருக்கும் போன மெசேஜ் உண்மையா?அரசு வட்டாரங்கள் விளக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவித் திட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில், ஜூன் 15-ஆம் தேதி முதல் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.2,500 வரவு வைக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான நிர்வாக மற்றும் நிதி ஆய்வுகள் இன்னும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அரசு தரப்பில் கிடைக்கும் தகவல்களின்படி, புதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு பயனாளிகள் பட்டியல், தகுதி விதிமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் மறுஆய்வு செய்யப்படுகின்றன. இதனால் ஜூன் மாதத்திலும் வழக்கம்போல ரூ.1,000 மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் இறுதி அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. அப்போது பெண்களுக்கான நிதியுதவி திட்டம் தொடர்பான விரிவான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, ரூ.2,500 உதவித்தொகை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்பாமல், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

பெண்களுக்கான நிதியுதவி திட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன், அதற்கான அரசாணை மற்றும் நடைமுறை விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 2500 women assistance on June 15 Is the message received by many genuine Government sources clarify


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->