வெறும் 5 ஆண்டுகள் போதும்... புதுமையான டிஜிட்டல் பிரசாரத்தை தொடங்கிய தேஜஸ்வி யாதவ்! - Seithipunal
Seithipunal


பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் இந்தியா (மகாகாத்பந்தன்) கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக உள்ள தேஜஸ்வி யாதவ், சமூக ஊடகங்களில் புதுமையான டிஜிட்டல் பிரசாரத்தை தொடங்கினார். ஃபேஸ்புக் வழியாக நேரலையில் வாக்காளர்களுடன் உரையாடிய அவர், இளைஞர்களை நேரடியாகத் தொடும் வகையில் உரையாற்றினார்.

அவரது உரையில், “பிகார் இளைஞர்களே, உங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது மகாகாத்பந்தனுக்கு வாக்களியுங்கள். வேலைவாய்ப்பு, நல்ல கல்வி, மருத்துவம், மற்றும் மாநில முன்னேற்றத்திற்காக இதைச் செய்யுங்கள். நான் உங்களிடம் 20 ஆண்டுகள் ஆட்சிக்கு வாய்ப்பு கேட்கவில்லை. வெறும் 5 ஆண்டுகள் போதும். அந்த 5 ஆண்டுகளில் நான் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், பின்னர் என்னை ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம்” என்று தேஜஸ்வி வலியுறுத்தினார்.

பிகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தேஜஸ்வியின் டிஜிட்டல் பிரசாரம் இளைஞர்களை குறிவைத்து நடப்பதால் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

“பிகார் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது எனது முதல் கடமை. மாநிலத்தில் குடியுரிமை மதிப்பு, கல்வி தரம், தொழில்துறை வளர்ச்சி ஆகியவை உயர்த்தப்படும்,” என்று அவர் வாக்குறுதி அளித்தார். தனது உரையின் இறுதியில், “எனக்கு வெறும் 5 ஆண்டுகள் அளியுங்கள்; பிகாரை மாற்றி காட்டுவேன்” என்ற தேஜஸ்வியின் அழைப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RJD leader Tejashwi Yadav online election campaign


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->