தலைவர் பதிவியை ராஜினாமா செய்கிறேன் - புயலை உண்டாக்கிய சரத் பவார்! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா  மாநிலத்தில் பெரும் அரசியல் புயல் அடிக்க தொடங்கியுள்ளது. 

அம்மாநிலத்தின் பலம்வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார், பாஜகவுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராகும் முயற்சியில் இறங்கியதாக பேசப்பட்டது. 

மகாராஷ்டிரா சிவ சேனா கட்சியின் தலைவராக இருந்த உத்தவ் தாக்கரே வாரிசு அரசியலை முன்னெடுக்க, அக்கட்சி இரண்டாக உடைந்து, ஆட்சியின் முதலமைச்சர் பதவியையும் இழந்தார் உத்தவ் தாக்கரே.

இதுகுறித்த உச்சநீதிமன்ற வழக்கில், தற்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து, பாஜகவுடன் கூட்டணி வைத்து, முதல்வர் பதவிக்கான முயற்சியில் அஜித் பவார் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், இதற்க்கு மறுப்பு தெரிவித்தார் அஜித் பவார்.

இருப்பினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் - அஜித் பவார் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதை அம்மாநில அரசியல் வட்டாரம் உறுதிப்படுத்துகின்றன.

மொத்தம் உள்ள 53 எம்எல்ஏக்களில் சுமார் 40 பேர் அஜித் பவாரின் பக்கம் உள்ளளவும், சரத் பவருக்கு எதிரான நிலையில் கட்சி திரும்பியுள்ளதாகவும் அம்மாநில அரசியல் வட்டாரம் உறுதிப்படுத்துகின்றன.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று, அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

resigning from the post of the national president of NCP Sharad Pawar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->