தமிழகத்தில் உண்மையான போட்டி தி.மு.க. - அ.தி.மு.க. இடையேதான்...!- எடப்பாடி பழனிசாமி
real competition Tamil Nadu between DMK and AIADMK Edappadi Palaniswami
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான 'எடப்பாடி பழனிசாமி' அண்மையில் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,"தமிழகத்தில் உண்மையான போட்டி எப்போதும் தி.மு.க. - அ.தி.மு.க. இடையேதான்.

இதை மக்கள் நன்றாக அறிவார்கள். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க. அச்சத்தில் இருக்கிறது. அடுத்த தேர்தலில் எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் 5வது முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணங்களின் முழுமையான விளக்கத்தை அரசு தர வேண்டும்.
எங்கள் ஆட்சிக்காலத்தில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உடனடியாக தொழில்கள் தொடங்கப்பட்டன. ஆனால் தற்போதைய அரசு பொய்யான செய்திகளை பரப்புகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
real competition Tamil Nadu between DMK and AIADMK Edappadi Palaniswami