ராமநாதபுரம் மாவட்ட பாமக சார்பில் கையெழுத்து இயக்கம்! எதற்காக தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


அனைத்து சாதியினரும், சமூகத்தினரும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் ஆகும் என்ற மருத்துவர் ராமதாஸின் கூற்றுக்கு இணங்க ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கையெழுத்து இயக்கம் துவக்கபட்டது. 

இராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட சார்பாக மாவட்டச் செயலாளர் அக்கீம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கம் துவக்கபட்டது. அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னிய சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்த போராட்டம் பல கட்டமாக நடந்து வருகிறது. இதில் வருகின்ற ஏழாம் தேதி நகராட்சிகளில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. 

அதனை அடுத்து வருகிற 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் "அனைத்து சாதியினரும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் ஆகும்" என்ற மருத்துவர் ராமதாஸின் கோரிக்கையை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கும் வகுப்பு வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, பொதுமக்களுக்கு விளக்கும் வண்ணம் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. 

வருகிற 21 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் பல்வேறு ஜாதி மதங்களை சேர்ந்த பொதுமக்களிடம் லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. முதலாவதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் நூர் முகமதுவிடம் முதல் கையெழுத்தைப் பெற்று இயக்கத்தைத் துவக்கினர். 

இந்நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பு செயலாளர் சண்முகம் மாவட்ட தலைவர் ஜீவா நகர செயலாளர் வெங்கடேசன் மண்டபம் ஒன்றிய செயலாளர் ராவுத்தர் கனி கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து மாணவர் சங்க தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramanathapuram PMK start signature movement


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->